துதியே துதியே துதியே துதியே
thudhiyae thudhiyae thudhiyae thudhiyae
துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே
தூதகனங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மை துதிக்கும் வேத முதல்வனும் நீர்
அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும் மண்டலாதிபனும்
நீர் பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மை தரிசிக்க நாடி தாழ்ந்தும்மை துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர்
அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர்
மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட்கொண்ட நாதனும் நீர்
கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவனே துத்தியம் செய்திடுவோம்