துதியே துதியே துதி என்றும் உமக்கே
thudhiyae thudhiyae thudhi endrum umakke
துதியே துதியே துதி என்றும் உமக்கே செலுத்தி வாழ்த்தி வணங்குவோம் என்றுமே
இறைவா உமது செயல்களை நினைத்து புகழ்ந்திடும் உள்ளங்கள் மகிழ்ந்திடும் இன்றுமே பாடி பாடி களித்திடும் மணமே
வானில் பறக்கும் பறவையை போல வாழவைத்தவர் பரமனே நீரே வையகம் செழிக்க உயர்த்துவோம் உம்மையே
நாளை நாளைக்காய் கவலைப் படாதே போஷிப்பேன் உள்னை என்றவர் மீே இம்மானுவேனாய் இருக்கும் என் தேவனே
காட்டு புஷ்பத்தை உடுத்தின் தேவன் கலங்கும் மனிதனை தேற்றிடும் நாதன் என்றென்றும் மாறா மகிமையின் இராஜன்
ஆழ்ந்த கடலில் அமிழ்ந்திடும் போதும் அணைத்து காத்திடும் உம் அன்பின் கரமே தூக்கி எடுத்து நிலை நிறுத்திடுமே
மரித்த சுத்தர்கள் உயிர்த்தெழுவாரே மரிக்கா பக்தர்கள் மறுரூபமாவார். தூயவனோடு துதியில் நிலைப்போம்