துதித்து பாடிட பாத்திரர் நீரே
thudhithu paadida paathirar neerae
துதித்து பாடிட பாத்திரர் நீரே துதித்து பாடிட பாடலும் நீரே துதியின் மத்தியில் வாசம் செய்பவரே துதியின் பாடலை எனக்குத்தந்தீரே
தூய்மையான தேவனும் நீரே தூயவர் பாடிடும் பாடலும் நீரே இரட்சிப்பை தந்திடும் இரட்சகர் நீரே இரட்சிப்பின் துதிகீதம் எனக்கு தந்தீரே
மகிமை நிறைந்த மன்னவன் நீரே மகிபனை பாடிடும் பாடலும் நீரே பரிசுத்த ஆவியின் வல்லமைநீரே பரிசுத்த பாடல் எனக்கு தந்தீரே
ஜெயித்து எழுந்த ஜெய கிறிஸ்து நீரே ஜெய துதி கீதங்கள் பாட செய்தீரே கன்மலையான கிறிஸ்துவும் நீரே கன்மலைராகங்கள் எனக்குத் தந்தீரே