துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே
thudhithiduvom thooyavar yesuvaiyae
துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே புதிய ஜீவனால் எம்மை புதுமையாய் மாற்றி திருச்சித்தம் செய்திடவே - உம் மகிமையின் ஆவியால் நிறைந்தே மகிழ மாதயவந்திடுமே
கடும் புயல்களிலே கலங்கிடாதேம்மை காத்திடும் கர்த்தரவர் திரு கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து மனமதை தேற்றினாரே
சுத்தர்களுடனே சீர் பொருந்திடவே நித்தமும் கிருபை ஈந்தார் - தம் ஜீவனை ஈந்து சாவினை ஜெயித்து சேயராய் மாற்றினாரே .
சிலுவை சுமந்தவர் பின் சென்றிடுவோம் சேவையும் செய்திடவே - உயர் பெலமதை யீந்து பயமதை நீக்கி பறந்திடக் கிருபை செய்வார்
அவர் வரும் வேளையை அனுதினம் நோக்கி ஆயத்தமாகிடுவோம் - எம்மை அழைத்தவரே கரம் பிடித்தவரே என்றும் அன்புடன் நடத்திடுமே