துதித்திடுவோம் நம் இயேசு பரனை
thudhithiduvom nam yesu paranai
துதித்திடுவோம் நம் இயேசு பரனை தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே பரமனின் அருளை தினம் பெறவே நாம் அனுதினம் துதித்திடுவோம்
சென்ற காலமெல்லாம் சுகமுடனே கர்த்தன் நம் இயேசுவே பாதுகாத்த தயவை எண்ணி என்றும் துதித்திடுவோம்
அழைத்த தேவனையே நம்பிடுவோம் அவரே நடத்திடுவார் ஜெயத்துடனே நித்தம் நடத்தி கிருபைகள் ஈந்திடுவார்
துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும் யாவும் அகற்றினாரே கண்ணீர் கவலை யாவும் துடைத்து கர்த்தன் தேற்றினாரே
தேவ வழி நடப்போர் யாவருக்கும் தேவன் துணையாகுவார் அன்பின் வாக்கு யாவும் அளிப்பார் அன்பரைத் துதித்திடுவோம்
தேவன் வந்திடுவார் வேகமுடன் வானில் தோன்றிடுவார் பரமனோடு வாழும் பாக்கியம் பாரில் ஆனந்தமே
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am
F Am
G F
E Am
C
C G
Dm Am
E7 Am
C
C G
Dm Am
E7 Am
C
C G
Dm Am
E7 Am
C
C G
Dm Am
E7 Am
C
C G
Dm Am
E7 Am