துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
thudhithiduven ummai uyarthiduven
துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் புகழ்ந்திடுவேன் உம்மை ஆராதிப்பேன்
கடந்த நாளில் கண்மணி போல் காத்தீரே சுமந்தீரே நடத்தி வந்தீரே புதிய நாளில் கண்மணி போல் காப்பீரே சுமப்பீரே நடத்தி வருவீரே
1.என் முன் இருந்த தடைகள் உடைத்து ராஜரீகம் செய்தவரே என்னை அழிக்க நினைத்தவர் முன்னே என்னை உயர்த்தி வைத்தவரே உந்தன் பாச கரத்தால் பிடித்தீர் என்னை விட்டுக்கொடுக்கலயே
2.என் மேல் இருந்த சாபங்கள் உடைத்து கிருபையாலே காத்தவரே முடிந்ததென்று நினைத்தோர் முன்பு சாட்சியாக நிறுத்தினீரே உந்தன் அன்பின் ஆழத்தில் விழுந்தேன் என்னால் எழுந்திட முடியலயே