துதிசெய் மனமே தேன்
thudhisey manamae then
துதிசெய் மனமே தேன்துதிசைய்துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
முன் காலமெல்லாம் உன்னைத்தம் கரமதில் ஏந்தி - வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது - ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே
சோதனை பலவாய் மேகம் போல் கால உன்னைச் சூழ்ந்தாலும் - சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும் - தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
சந்ததம் உன்னை நடத்திடும் ஆதி சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே