துதிசெய் மனமே நிதம் துதிசெய்
thudhisey manamae nidham thudhisey
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை