துதிசெய் மனமே நிதம்
thudhisey manamae nidham
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
முன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே
ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏகபரன் உன்காவலனாய் இருந்தாரே
சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
சந்தகம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே