துதிப்போமே நாம்
thudhippomae naam
துதிப்போமே நாம் துதிப்போம் துதித்தல் இன்பமே இயேசுவையே துதி மிகு சாற்றுவோம் நேசருக்கு
1. ஸ்தோத்திர பலி சாட்சியாய் அவர்க்கே செலுத்தியே புதிய கிருபையால் பெருக சாற்றிடுவோம் துதியே - எந்நாளும் - துதி
2. தாயை போல போஷித்து அணைக்கும் யெல்ஷதாவாய் கண் உறங்கிட கர்த்தர் யாவரும் சிறந்தோர் - எமக்கு - துதி
3. ஜீவனோ சுகமோ துன்பமோ துயர் கிறிஸ்துவின் அன்பை விட்டு கற்றிடுமோ முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் -- அன்பாலே - துதி
4. நித்திய தேவ மகிமையை அடைய சத்தியத்தால் இடைக்கட்டி அழைத்தார் நித்திய நம்பிக்கையே - பெருகுதே - துதி
5. ஆதி அப்போஸ்தல உபதேசத்தினால் தேவன் சுதராய் விளங்கிடுவோர்க்கே நீதியின் சூரியனே - தோன்றிடுவான் - துதி
6. சீயோன் இன்ப எருசலேம் மனையே நாயகன் இயேசுவே உந்தன் பதியே பாட்டாலே துதிப்பாய் -- சீயோனின் - துதி