துதிப்போம் துதிப்போம்
thudhippom thudhippom
துதிப்போம் துதிப்போம் சபையோரே இந்த இரட்சிப்பை தந்தை இயேசுவையே நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் பூவில் எங்கும் கிடையா பெரும் பாக்கியம்
1. சுத்தப் பரிசுத்தரவரே எங்கும் சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே தூயதாம் தூதர் பாடி போற்ற அவர் துதிக்குள்ளே வாசம் செய்வதாலே
2. புற ஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு முறையீனமாகக் கெட்டுப்போனோம் திறமாக இயேசு வந்துதித்து தம் திரு இரத்தம் சிந்தி உயிர் தந்தார்
3. எரிகோவின் கோட்டை விழுந்ததே இந்த துதியாகும் ஆயுத மதினால் ஆஹா! போற்றி களித்து துதிப்போமே தீய சாத்தானின் கோட்டைகள் விழவே
4. ஆறு இருப தாசாரியர் துதி செய்தார் சாலெமோன் ஆலயத்தில் தேவன் மகிமையாய் வந்திறங்கினாரே இன்றும் மகிமையாய் மத்தியில் வரவே
5. இரண்டாம் வருகையும் சமீபம் பல ஆண்டாக எச்சரித்தும் வாரார் ஆண்டாம் இதிலே இயேசு வந்தால் நாம் ஆயத்தமாக இருக்கவே