துதிப்பேன் உம்மை துதிப்பேன்
thudhippen ummai thudhippen
துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2) பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை (2) உம்மை ஆராதிப்பேன் (4)
ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4)
உளையான சேற்றினின்று உம் கரத்தாலே தூக்கினீர் உதவாத என்னையும் உபயோகித்தீர் - (2)
வறண்ட என் வாழ்வினை உம் வார்த்தையால் மாற்றினீர் உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2)
பெலனற்ற நேரத்தில் உம் கிருபை பெலனானதே தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே- (2)