துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே
thudhippen thudhippen yesuvaiyae
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன் இம்மானுவேலரையே துதித்துப் பாடுவேன் நான் துதித்து பாடிடுவேன்
தாவீதைப் போல நடனமாடி இயேசுவையே துதிப்பேன் பவுலும் சீலாவும் துதித்தது போல பாடியே துதித்திடுவேன்
எஸ்தரை போல ஜனங்களுக்காக போராடி ஜெபித்திடுவேன் தானியேல் போல முழங்காலில் நின்று தேவனையே துதிப்பேன்
யாக்கோபை போல போராடி நானும் ஆசிரை பெற்றிடுவேன் யோசேப்பை போல பரிசுத்தமாக இயேசுவையே துதிப்பேன்
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரே துதித்திடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓயாமல் துதித்திடுவேன்