துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்
thudhippadhum sthotharippadhum
துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும் எங்கள் சந்தோஷமே ஜெபிப்பது வேதம் வாசிப்பது எங்கள் சந்தோஷமே
1.எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததால் எங்கள் சந்தோஷமே இந்த உலகம் தராத சந்தோஷமே எங்கள் சந்தோஷமே.
2.காலை எழுவது பாடி மகிழ்வதும் எங்கள் சந்தோஷமே புது கிருபையால் தினம் நிறைவதும் எங்கள் சந்தோஷமே.
3.பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவது எங்கள் சந்தோஷமே பரன் இயேசுவே களி கூறுவதும் எங்கள் சந்தோஷமே.
4.இயேசு ராஜனை பாடிப் போற்றுவதும் எங்கள் சந்தோஷமே அவர் சுவிஷேசத்தை பறை சாற்றுவது எங்கள் சந்தோஷமே.
5.விசுவாசத்தின் நல்ல போராட்டமே எங்கள் சந்தோஷமே பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே எங்கள் சந்தோஷமே
6.கடைசி எக்காள தொனி கேட்டிடவே எங்கள் சந்தோஷமே கண்ணிமைப் பொழுதில் மறுரூபமாவதும் எங்கள் சந்தோஷமே