துதிப்பதும் ஆனந்தமே
thudhippadhum aanandhamae
துதிப்பதும் ஆனந்தமே - துதிமுழங்கும் தூயர் பரிசுத்தரே - ஆ! ஆ தூயா நேயா குணாநிதியே
ஆதி சபையிலே துதிமுழங்க ஆவி வந்தமர்ந்ததுவே - ஆ! ஆ! பலமுடன் சடுதியிலே
வானிலிருந்து பரன் - முழக்கத்துடன் வல்லமையாய் உதித்தார் - ஆ! ஆ! வரவே நிறைவாய் நம் வீடதிலே
அக்கினி நாவருள - ஆதி சித்தர்கள் அந்நியபாஷை பேசினர் - ஆ! ஆ! ஆவிவரம் ஆ! வாக்குடனே
பக்தர்கள் மனம்களிக்க - பகைவருள்ளம் பரிகாசம்தான் தொனிக்க - ஆ! ஆ! பக்திசக்தி இவ்வாவியிலே
நன்றியுடன் துதிப்போம் - தேவாவிநமக் கீந்த பராபரனை - ஆ! ஆ! நீதிகதி ஜீவனிவரே
ஆயிர மாயிரமாய் - அதிசுந்தரன் ஆகாயமே வருவார் - ஆ! ஆ! ஆயருடன் நாம் ஏகிடுவோம்