துதிப்பதே நல்லது
thudhippadhae nalladhu
துதிப்பதே நல்லது துதியே நல்லது துதிப்பதே சிறந்தது துதியே சிறந்தது
மகிமையும் உமக்கு தான் மாட்சிமை உமக்குத்தான் துதியும் உமக்குத்தான் ஸ்தோத்திரம் உமக்குக்தான்
எந்நாளும் துதித்திடுவேன் எப்போதும் துதித்திடுவேன் உம்மையே துதித்திடுவேனே துதிப்பேனே -(2) தோல்வியில் விழுந்தாலும் கண்ணீரே என் வாழ்வானாலும் உம்மையே துதித்திடுவேன் துதிப்பேனே -(2) யாரும் தர இயலா கிருபைகள் எனக்குத் தந்தீர் கிருபையின்மேல் கிருபை தந்து கனிவாய் நடத்தினீர் உமக்கே ஆராதனை செய்கிறோம் -(2)
மனிதர்கள் தள்ளினாலும் உறவுகள் வெறுத்தாலும் உம்மையே துதித்திடுவேன் துதிப்பேனே -(2) வியாதி என்னை வருத்தினாலும் வேதனையில் துடித்தாலும் உம்மையே துதித்திடுவேன் துதிப்பேனே -(2) யாரும் தர இயலா இன்பத்தை எனக்குத் தந்தீர் துன்பங்களை இன்பமாய் மாற்றியும் நடத்தினீர் உமக்கே ஆராதனை செய்கிறோம்-(2)