துதிக்கும் கனத்திற்கும்
thudhikkum kanathirkum
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா
உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீரே ஆதாரமே ஆதாரமே..