துதிகளின் பாத்திரரே
thudhigalin paathirarae
துதிகளின் பாத்திரரே தூயவரே இயேசுவே துதிக்கையிலே உம்மை துதிக்கையிலே புது பெலன் இறங்கிடுதே
ஆராதனை செய்யும் போது என்னை ஆட்கொண்ட தெய்வம் நீரே ஆர்பரித்து பாடும்போது என்னை ஆவியில் நினைப்பினிரே பெலவீனன் நான் என்னை பெலப்படுத்தும் ஆவியின் அனல் ஆகும்
அன்னாளை போல் ஆலயத்தில் நான் ஓடி வந்து அழுகையிலே ஆகாரைப்போல் தனிமையிலே நான் உம்மை நோக்கி பார்க்கையிலே தேற்றினீரே என்னை தேற்றினீரே ஆறுதல் அளித்தீரே
சாலமோன் ஆலயத்தில் தேவ மகிமை வந்ததுபோல் வஸ்திரத்தின் தொங்கலினால் தேவாலயம் நிறைந்தது போல் ஆலயமாம் என்னை நிரப்பிடுமே அபிஷேகம் செய்திடுமே