துதிகளின் பாத்திரனே
thudhigalin paathiranae
துதிகளின் பாத்திரனே துதிதனை ஏந்தி நின்றோம் தூயாவி அருள் தாருமே துதிகளின் பாத்திரனே
கடந்த எம் நாட்களெல்லாம் கருணையாய் நடத்தினாரே கருத்துடன் மா தயவை கனிவுடன் பாடிடுவோம்
ஆபத்து நாளினிலே ஏற்ற சகாயம் நீரே அதிசயம் செய்பவரே துதிகளை செலுத்துகின்றோம்
முற்றுமாய் பலியாகவே அப்பணித்தோம் எம்மையே ஆளுகை செய்திடுவீர் ஆசீரை அளித்திடுவீர்
மகிமையின் விண்ணரசர் மகத்துவ தேவனவர் மகிமையாம் கனமதனை மகிழ்வுடன் செலுத்துகின்றோம்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm Em G A D D A D G A G A D D A D G A G A D D A D G A G A D D A D G A G A D