துதிகளில் வசித்திடும்
thudhigalil vasithidum
துதிகளில் வசித்திடும் என் இயேசு ராஜனே துதிக்கின்ற இடங்களில் இறங்கி வருவீரே வாஞ்சிக்கிறோம் உம்மையே வாஞ்சிக்கிறோம் உம்மையே
தூயரே தூயரே தூயரே வாருமே - (2)
முன்மாரியாய் அன்று பெய்தது போல் பின்மாரியாய் இன்று பெய்திடுமே அக்கினி மயமான நாவுகளால் எங்கள் மேலே இன்று அமர்ந்திடுமே -2
வறண்ட நிலங்கள் நீரூற்றாய் மாற உம் ஆவியை அனுப்பிடுமே உலர்ந்தவை எல்லாம் உயிருடன் எழும்ப உம் காற்றை வீசிடுமே - 2