துதி கன மகிமை
thudhi kana magimai
துதி கன மகிமை இயேசுவுக்கே - துாய நாமமதைப் புகழ்ந்தேத்திடுவோம்
1. ஜெயத்துடனே நம்மை நடத்தினார் - உயர் நன்மைகளால் முடிசூட்டினார். நன்றியால் நிறைந்துள்ள பொங்கி வழிந்திடுதே நாதனைப் புகழ்ந்திடுவோம் - துதி
2. காலை நிழலது சாய்வது போல் - மாறி பாய்ந்திடுதே இக வாழ்வதுவோ மயங்கிடாதோர் நல் சுதந்திரம் வானுலகில் வைத்தவர் அழைக்கிறாரே - துதி
3. பாரி எம்மை அவர் பிரித்தெடுத்து - பெரும் ஜாதியாக்கி உபதேசத்தினால் மாதிரத்தோர்க்குயர் சுவிசேஷம் ஈந்திட மன்னவன் கண்டனரே - துதி
4. நிறுத்திடவே தம்முன் நிர்மலராஜ் - திரு சரீரத்தின் வழியும் மரணத்தினால் நம்பிக்கையின் சுவிசேஷத்தில் நிலைத்திட அம்புவி தனில் அழைத்தார் - துதி
5. சேர்த்திடவே பூவில் சீர் பலனை - தேடி கூட்டிட சீக்கிரம் வந்துடுவார் சீயோனே பார் உந்தன் வேலை முடிந்திடுதே சிந்தை செய்தானந்திப்பாய் - துதி