தோழரே சேர்ந்து வாழுங்கள் தேவனை
thozharae serndhu vaazhungal devanai
தோழரே சேர்ந்து வாழுங்கள் தேவனை புகழ்ந்து பாடுங்கள் சேனையின்
தேவன் நல்லவர் (3) என்றல்லேலூயா சொல்லிப் பாடுங்கள்.
1. காவலர் தளர்ந்து போய் பலசாலிகள் கூனிப்போமுனும் கிண்ணிகள் நசுங்கி போமுனும் கேட்பவர் குன்றிப் போமுனும் பார்ப்பவர் மறைந்துப் போமுனும்
ஆதரவான யேசு நாதனை வாலிபத்தில் நீர் நினைத்திடும்.
2. கடைசி நாள் வரும்போது நீர் சுத்தராய் ஆர்ப்பரிக்கவும் பேரிகை தொனிக்கக்கேட்கவும் தேவனைத் தரிசித்தாளவும் மோட்சத்தில் பங்கடையவும்
வால வயதில் ஜீவ நதியில் தாகந்தீர்ந்து உம் பாவம் நீக்கிடும்
3. மைந்தனார் பாதத்தைப் போற்றி நல் விந்தையாய்ச் சிறந்து நல்வேத மந்தையில் சேர்ந்திடும் திரு வேந்தனை வணங்கிடும் பரிசுத்தனைப் போற்றிடும் மறு
லோகமதனில் தூத சேனையோடேகி மாமகிழ்வோடு வாழலாம்