தோழனே உன் ஜீவன் இங்கே
thozhanae un jeevan ingae
1. தோழனே! உன் ஜீவன் இங்கே என்றென்றைக்கும் நிற்குமோ? தோன்றிப் போகும் புகை போல அது நீங்கும் அல்லவா? ஆயுள் நாளை ஆயுள் நாளை நீ ஆதாயம் பண்ணிக்கொள்.
2. இவ்வுலகில் உள்ள பொருள் நிலையாமல் நீங்குமே பரலோக பொக்கிஷங்கள் என்றென்றைக்கும் நிற்குமே திடன் கொண்டு திடன் கொண்டு அதையே நீ தேடிளக்கொள்.
3. மாந்தர் மேன்மை மேட்டிமைகள் புல்லைப்போல் உலர்ந்துபோம் லோகக் கல்வி யோசனைகள் சீக்கிரம் ஒழிந்துபோம் பெலவானும் பெலவானும் பெலனற்றவன் ஆவான்.
4. தேக சொஸ்தமுள்ளவர்கள் நினையாத நேரத்தில் மண்ணுக்குத் திரும்புவார்கள் இதை எண்ணி தோழனே! இப்பொழுதே இப்பொழுதே உன் ரட்சிப்பைத் தேடிக்கொள்.
5. சாவின் மேலே ஜெயங் கொண்ட யேசு நாதர் வருவார் தனக்குள் சாவை அடைந்த எல்லாரை உயிர்ப்பிப்பார். நித்ய ஜீவன் நித்ய ஜீவன் ரூடவ்வாய் தங்தருளுவார்.