தோத்திரம் துதி சாற்றுவோம்
thothiram thudhi saatruvom
தோத்திரம் துதி சாற்றுவோம் என்றும் நிதியே தினமே - கதியே
1. பாடித் துதிப்பேனே பலியானதை படைப்பேன் பரனே குருவே அரசே அரணே பணிவாய்ப் பாடுவேனே - தோத்
2. போற்றி துதி தானே தாவீதரசன் முழுமனதாய் பொருளே அருளே இருள் அகல போற்றி வாழ்த்துவேனே - தோத்
3. பாதம் தொழுவோமே பரனை நினைத்தார் மிகப் பரிவாய் பதிலேதறியேன் பதியே உமை நான் பணிவாய்ப் பாடுவேனே - தோத்
4. அரசே வருவீர் ஆவல் தீர திருமுகமே தருவீர் ஒரு மா மகிமை தனக்கேயுயர்ப்பீர் போற்றுவேனே - தோத்
5. காத்தார் என்னை நீரே கருணைக் கடலாயளித்தீரே கதியே தருவாய் திருவே மகிமை கதித்துப் பாடுவேனே - தோத்