தூய்மையிலே நாம் கர்த்தரை ஆராதிப்போம்
thooymaiyilae naam kartharai aaraadhippom
1. தூய்மையிலே நாம் கர்த்தரை ஆராதிப்போம் பணிந்து அவரைப் புகழ்வோமே தாழ்ந்து கீழ்படிந்து அவரின் நாமத்தை வணங்கி துதித்து தொழுவோமே.
2. பாரத்தினை அவர் பாதத்தில் வைத்திடு உனக்காய் அதனைத் தாங்கிடுவார் உன் ஜெபம் கேட்டுத்தேற்றிடுவார் உன்னை உன் காலடிகளைக் காத்திடுவார்.
3. அஞ்சிடாதே ப்ரகாரத்தினுள் சென்றிட நீ பெற்ற ஆஸ்தியைக் காணிக்கையாய் கருதி வாஞ்சையாய்ப் படைக்கும்பொழுது அன்பின் சத்ய வார்த்தை புலனாகும்.
4. பக்தியோடே நீ படைக்கும் காணிக்கையை நிச்சயம் கர்த்தர் தாம் ஏற்றுக் கொள்வார் அவர் உன்னுடைய கண்ணீரை நீக்குவார் மகிழ்ச்சி அருள்வார் என நம்பு.