தூய்மை ஒளி எம்மில்
thooymai oli emmil
தூய்மை ஒளி எம்மில் வீசச்செய்திடும் தூய ஆவியே வல்ல ஜீவ ஆவியே (2) இப்போ வாரும் தாரும் அருள்மாரியை ஊற்றும் ஊற்றும் பின்மாரியை (2)
வானம் திறந்து ஐயா வல்ல ஆவியை தானமாகவே இன்று தந்திடுமே
தினந்தோறுமே தேவா அக்கினியை அனுப்பிடுமே என்னை அனல் மூட்டுமே
தேவசாயலில் தேவமகிமையோடு மண்சரீரம் மறுரூபமாகவே
எழுப்புதலால் உயிர் மீட்சியடைய எழுந்திடுமே, எமை நிரப்பிடுமே
ஆதி நாட்களின் வல்ல அற்புதங்கள் இந்த நாளிலும் நடைபெற்றிடவே