தூயவரே துணையானீரே
thooyavarae thunaiyaaneerae
தூயவரே துணையானீரே துதிகன மகிமை உமக்கே பரிசுத்தரே பரிகாரியே பரலோக இராஜா நீரே (2)
உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4)
1.உன்னதமானவரே உயர்ந்த அடைக்கலமே (2) உறவாய் வந்தீர் உயிரை தந்தீர் உண்மையான தேவனே (2)
2.நிலையற்ற உலகத்திலே நிரந்தர ஆதாரமே (2) நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர் நித்திய இராஜனே (2)
3.தடுமாறும் நேரத்திலே தாங்கி பிடிப்பவரே (2) தாயின் கருவில் என்னைக் கண்டீர் கைவிடா தகப்பனே (2)