தூயவரே தூயவரே தூயவரே
thooyavarae thooyavarae thooyavarae
தூயவரே, தூயவரே, தூயவரே உமக்கு ஆராதனை -2 ஆராதனை, ஆராதனை தூயவரே உமக்கு ஆராதனை -2
1. எல்லாமே பார்த்துக்கொள்ளும் யேகோவா யிரே என்றும் உமக்கே ஆராதனை எந்நாளும் வெற்றிதரும் யெகோவா நிசியே எந்நாளும் உமக்கே ஆராதனை. கூடவே இருக்கும் யெகோவா ஷம்மா எப்போதும் உமக்கே ஆராதனை -2
2. சுகத்தை தருகின்ற யெகோவா ராஃப்பா மருத்துவரே உமக்கே ஆராதனை சமாதானம் தருகின்ற யெகோவா ஷாலோம் சத்தியரே உமக்கு ஆராதனை. நல்ல மேய்ப்பன் யெகோவா ரூவா நாளெல்லாம் உமக்கு ஆராதனை -2