தூயாதி தூயவரே
thooyaadhi thooyavarae
தூயாதி தூயவரே சர்வ வல்லவரே எங்கள் துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கிறோம் துதிக்கிறோம் எங்கள் தேவனே போற்றுகிறோம் போற்றுகிறோம் எங்கள் ராஜனே
1. இம்மட்டும் நடத்தினீர் நன்றி இயேசையா இனிமேலும் நடத்துவீர் நன்றி இயேசையா
2. சபையோராய் கூடி வந்தோம் உம்மை பாட வந்தோம் ஆலயத்தில் உம் கிருபை நாங்கள் கண்டடைந்தோம்
3. உள்ளங்கள் துதித்திடுதே உம்மில் மகிழ்ந்திடுதே நதியைப் போல் உன் சமூகம் எங்களை நிரப்பிடுவதே
4. உன்னதரே உயர்ந்தவரே உம்மை தெய்வமே உயிரோடு கலந்தவரே உண்மை நேசரே