தூயா தூயாவே துதித்திடுவேனே
thooyaa thooyaavae thudhithiduvenae
தூயா தூயாவே - துதித்திடுவேனே - தூய அன்பால்
1. தேவ அன்பை அறிந்திட நாமே - 2 தேவாதி தேவா சிலுவை சுமந்தீர் - 2
2. பலிபீடத்தில் ஆவி ஆத்மா சரீரம் - 2 படைத்திட்டேனே என்னை ஏற்றுக்கொள்வீரே - 2
3. ஏழையென் ரோகம் யாவும் சுமந்தே - 2 ஏறினீர் கொல்கொதா மேட்டினில் அன்பால் - 2
4. ஆவியின் அசுத்தம் யாவும் அகற்ற - 2 அன்பரே எனக்காய் முள்தனை அணிந்தீர் - 2
5. ஜீவனின் புதுவழியாய் நரரேக - 2 தேக மாகுந்திரை நீர் கிழித்தீரோ - 2
6. பரிசுத்த வழி என்னும் புதுவழி நடக்க - 2 குருசெடுத்தீரோ நெருக்கத்தின் வழியாய் - 2