தூயா தூயாவே ஸ்தோத்திரம்
thooyaa thooyaavae sthothiram
தூயா தூயாவே ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் - இன்றும் என்றும் -2 (ஸ்தோத்திரம்)
அன்னியனாய் இருந்து அன்பருமை வெறுத்த என்னையும் மீட்டநீரோ என்னையும் மீட்டநீரோ என்னையும் மீட்ட நீரோ விந்தையாம் - 2
சுத்திகரித்து என்னைத் தூயனாய் ஆசரிக்க சுத்த ஆவியீந்தீரோ சுத்த ஆவியீந்தீரோ சுத்த ஆவியீந்தீரோ அற்புதம் அற்புதமே - 2
நோய்பிணி யாவும் தீர நேயா உம் ஆதரவால் காயங்கள் சகித்தீரோ காயங்கள் சகித்தீரோ காயங்கள் சகித்தீரோ என்சொல்வேன் ஆ! என்சொல்வேன் - 2
ஏன்தான் இவ்வன்பெனக்காய் ஏதுமில்லாத என்னில் என்னதான் கண்ட நீரோ என்னதான் கண்டநீரோ என்னதான் கண்ட நீரோ அண்ணலே என் அண்ணன் - 2
வருவீர் எமையெடுக்க துரையே உம்தாசர்களும் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் ஆனந்தம் ஆனந்தமே - 2
ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் பொங்குதென் பாத்திரமே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே இன்றுமே என்றென்றுமே - 2