தூய தூய தேவனை நாம
thooya thooya devanai naama
தூய தூய தேவனை நாம் போற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
பாவக்கறைகளும் நீக்கினதால் ஸ்தோதரிப்போம் என்றும் ஸ்தோத்திரிப்போம் - சாபங்கள் போக்கி தம் சொந்தமாய் எம்மையே சேர்த்த தம் அன்பதை எண்ணிடுவோம்
வியாதியில் பரிகாரியானவரை ஸ்தோத்தரிப்போம் என்றும் ஸ்தோத்திரிப்போம் - சோதனை வேதனை நேர்ந்த எவ்வேளையும் சோர்ந்தழியாதெம்மை காத்தனரே
ஆவியில் பாடியே அகமகிழ்ந்தே ஸ்தோதரிப்போம் என்றும் ஸ்தோத்திரிப்போம் - மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில் மா பரமானந்தம் பொங்கிடுதே
உன்னத ஊழியம் அளித்ததினால் ஸ்தோதரிப்போம் என்றும் ஸ்தோத்திரிப்போம் ஆதியும் அந்தமுமான எம் இயேசுவை ஆர்வமுடன் நாமும் சேவிப்போமே
ஆத்ம மணாளனே வந்திடுவார் ஸ்தோத்தரிப்போம் என்றும் ஸ்தோத்திரிப்போம் பூரணராய் பறந்தேகிடுவோம் நித்ய பேரின்ப மோட்சத்தில் வாழ்ந்திடவே