தூய தூய தேவனை
thooya thooya devanai
தூய தூய தேவனை நம் போற்றி வெற்றிப் புகழ்ந்திடுவோம்
1. ஸ்தோத்திர கீதங்கள் முழங்கிடுதே - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் பாவமாம் சேற்றினில் புரண்டாலும் எம்மையே பாசமாய் இரங்கியே ரட்சித்தவரே - தூய
2. நன்றியால் உள்ளங்கள் நிறைந்திடுதே - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் எத்தனை துன்பங்கள் துயரங்கள் பெருகினும் இத்தனை கருணையால் தாங்கிடும் மா - தூய
3. ஆதரவளித்திடும் ஆருயிரே - அல்லேலூயா! அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் கோரமாய்ச் சோதனை சூழ்ந்திடும் வேளையில் மாறா தம் வார்த்தையால் தேற்றுவாரே - தூய
4. ஆவியில் பாடியே அகமகிழ்வோம் - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில் மா பரமானந்தம் பொங்கிடுதே - தூய
5. அன்பின் மணாளனே வந்துடுவார் - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் பூரண பரிசுத்த வான்களோடேகியே பரம் சீயோனில் நாம் வாழ்ந்திடுவோம் - தூய