தூய பிதாவின் திருமுகம்
thooya pidhaavin thirumugam
தூய பிதாவின் திருமுகம் தரிசிப்போர் சீயோனில் நிற்கும் ஊழியர்
1. தாயும் தந்தையும் சோதரரனைத்தும் தாபரித்திடும் எத்தலமதும் வெறுத்தும் தம்மையோர் பானபலியாகவே வார்ப்பவர் தரணியில் சேவைதனில் மணிப்போல மாய்பவர் - தூய
2. சிறந்த தூபமென புகைந்து வரைபவர் இகமதில் ஜெபத்தில் போராடி நிற்பவர் உகந்ததோர் சேவையொன்றே அகந்தன்னில் கொண்டவர் தகுமென திருச்சித்தம் செய்யத் தம்மைத் தந்தவர் - தூய
3. கிறிஸ்துவோடிணைந்த ஸ்தானாபதிகள் திருவடிச் சுவட்டில் நடந்தே பின் செல்பவர் பரிசுத்தர்க்கோர் முறை அளித்த விசுவாசத்தை கருத்துடன் காத்திடவே நற்போராட்டம் செய்பவர் - தூய
4, சரீரமும் சபைக்காய் சந்தோஷத்துடன் சரீரத்தில் பாடுகள் நிறைவேற்றும் தூயவர் சிந்தையில் சத்தியராஜ் மெல்கிசேதேக்கைப்போல் சந்ததமே புவிதனில் தந்தையராய் வாழ்ந்தவர் - தூய
5. அவரது அழைப்பை உணர்ந்து நற்சேவையில் எவர் முன் வருவீர் அரும் உயிர் அளிக்க வருவாரே மந்தையின் மேய்ப்பராய் தருவாரத்தினமதில் மகிமை கிரீடம் - தூய