தூய கல்வாரியில்
thooya kalvaariyil
தூய கல்வாரியில் சாய்ந்துயிர் ஏகிடும் நாயகன் இயேசுவுக்கு ஏன் இந்தப் பாடுகள்
1. வெம் பாவ காரணமே கொல்கொதா காட்சியாமே நம்புவோர் எவருங்குண்டே - ஜீவன் பெறவே உயர்ந்தோர் அம்பரனார் கொடுங்குருசில் - குருதி செம்பொன் மேனி நின்ற சொரிந்தார் - தூய
2. மும்முறை தாழ வீழ்ந்தே வேண்டுதல் செய்தவரே மூவுலகந்தனை திரு வாக்கினாலே தாங்குவோரே மூன்று ஆண்டுகளில் தொங்கியே - மரித்தார் மூவர் லொன்றான இவரே - தூய
3. நாட்டமுடன் நன்மைகள் செய்தலைந்த பாதங்கள் நடுங்கிய சீடருக்காய் அலைமேல் சென்ற பாதங்கள் நாடி நம்மை வந்த பாதங்கள் - மரத்தில் நாட்டியறை யுண்ட பாதங்கள் - தூய
4. காயங்கள் ஏற்றதால் வேதனை கொண்டவரே பாயும் செங்குருதி கொண்டு கழுகி பாவங்களை நீக்கி தயிராக மாற்ற நினைத்த - சிலுவை மெய்யனின்றி மீட்பரில்லையே - தூய
5. அன்பினால் ஜீவனையே வைத்திட வந்ததாலே அந்தப் மிகு அவர் முகம் அந்தக் கேடடைந்திடவே இந்தக் கோரப் பாடடைந்தாரே - தமது மந்தைக்காக ஜீவன் வைத்தாரே - தூய