தூய இம்மானுவே
thooya immaanuvae
1. தூய இம்மானுவேல் இயேசுவே நீர் காப்பீரே உம் தயவால் தூய்மையாக உமக்காகவே காருண்ய கேடகத்தினால் தங்குவீர் காருண்யமே உம்மைத் துதிப்பேனே
சதா காலம் உன்னோடிருப்பேன்” என்று வாக்குத்த வல்லவா கலங்கிட்டேன் என்னைக் கைவிட்டீர் காப்பீரே அந்தம் வரை
2. நீர் ஆபிரகாம் சந்ததிக்கு கானானை சுதந்திரமாய் விசுவாசத்தால் ஈந்தீரே பரனே உம் கிருபையால் அழைத்தீரன்றோ பரம கானான் நான் அடைந்திட
3. அக்னி சூளையின் நடுவினில் மூவரையும் தானியேல் கெபியில் விக்கினமின்றி காத்தீரே சோதனை வேதனை சூழும் வேளையில் சோர்ந்திடதான் நீர் காத்திடும்
4. சூரிய சந்திரனை கிபியோன் மேலும் ஆயலோன் பள்ளத்தாக்கு நிறுத்தி ஜெயமளித்தீர் ஜெயம் அடையும் வரை போராடு உதித்திடும் நீதியின் சூரியனாய்
5. நினையா வேளைதனில் நீர் வந்திடுவீர் ஜெபத்துடன் விழித்திருந்து நாதனைச் சந்திப்பேனே முகமுகமாகவே கண்டும்மை நான் யுகாயுகம் சேவிப்பேன் சீயோனில் - சதா