தூய ஆவியே வாரும்
thooya aaviyae vaarum
தூய ஆவியே வாரும் வெண்மை புறாவே வாரும் அன்பின் அனலாய் வந்து எம்மில் அபிஷேகம் தாரும்-2
1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும் எம்மை தூக்கிவிடும் தனிமையிலே சோர்ந்திருக்கும் மனதை திடப்படுத்தும்
எம்மை சூழும் கிருமிகளை நெருப்பாய் அழித்துவிடும் நெஞ்சினிலே சோர்வின்றி ஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே
2.ஆழ்மனதில் படிந்திருக்கும் பயத்தை போக்கிவிடும் வறுமையிலே வாடி நிற்கும் நிலையை அகற்றிவிடும்
மனம் தேடும் அமைதியினை கொடையாய் பொழிந்தருளும் அன்புடனே ஆர்வமுடன் துத்திட அருள் தாரும்-தூய ஆவியே
3.சோதனையை கடந்து செல்ல வழியை காட்டிவிடும் பொறுமையுடன் காத்திருக்கும் உறுதியை தந்தருளும்
எதிர்கொள்ளும் நாட்களெல்லாம் ஒளியால் நிரப்பிவிடும் உம்முடனே ஒன்றிணைந்து நடந்திட பலம் தாரும்-தூய ஆவியே