தூய ஆவியே துணையாக வருவீர்
thooya aaviyae thunaiyaaga varuveer
தூய ஆவியே துணையாக வருவீர் இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர்
மனதின் தீமைகளை மன்னிக்க வருவீர் மனதில் கீறல்களை ஆற்றிட வருவீர்
மனதின் பாரங்களை போக்கிட வருவீர் மனதின் காயங்களை ஆற்றிட வருவீர்
தாழ்வுமனம் நீக்கித் தேற்றிட வருவீர் தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர்
பாவப்பிடி நின்று மீட்டிட வருவீர் பாவக்கறை கழுவி தூய்மைதர வருவீர்
கல்மன் இதயத்தை கரைத்திட வருவீர் இதயத்தின் வெறுப்புக்களை விலக்கிட வருவீர்
அலகையின் வலை அறுத்து விடுதலைதர வருவீர் அன்பின் வழிநடக்க அன்பைத்தர வருவீர்