தூரத்தோர் குன்றிலே நின்றதோர் குருசு
thoorathor kundrilae nindradhor kurusu
1. தூரத்தோர் குன்றிலே நின்றதோர் குருசு அவமானத்தின் சின்னமதாம்; அந்நீசக் குருசில் மா நேசர் மரித்தார் பாவங்கள் யாவையும் போக்க. பண்டை க்ருசை நான் பாராட்டுவேன் வெற்றி அடைந்தே தீருமட்டும்; பண்டை க்ருசை நான் பற்றிக்கொள்வேன் பதில் க்ரீடம் உண்டு ஓர் நாளில்.
2. அப்பண்டைக் குருசை உலகம் தள்ளினும் எனக்கோர் பேர் கவர்ச்சி; தேவாட்டுக் குட்டியே விண்மேன்மை தள்ளினார் இருண்ட கல்வாரிக்காக. பண்டை க்ருசை நான் பாராட்டுவேன் வெற்றி அடைந்தே தீருமட்டும்; பண்டை க்ருசை நான் பற்றிக்கொள்வேன் பதில் க்ரீடம் உண்டு ஓர் நாளில்.
3. அக்கோர குருசில் ரத்தத்தின் கறைகள் எனக்கு மா அழகு அக்குருசில் யேசு பாடு சாவு ஆனார்; பரிசுத்தம் ஆக்க என்னை. பண்டை க்ருசை நான் பாராட்டுவேன் வெற்றி அடைந்தே தீருமட்டும்; பண்டை க்ருசை நான் பற்றிக்கொள்வேன் பதில் க்ரீடம் உண்டு ஓர் நாளில்.