தூக்கி சுமந்தவரே
thookki sumandhavarae
தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே என் தேவை எல்லாம் நீர்தானே-2
எலியாவை போஷித்தவர் உன்னை போஷிப்பாரே உன்னை என்றென்றும் நடத்துவாரே-2
1.கடந்து வந்த பாதைகளெல்லாம் கண்ணீர்கள் சூழ்ந்த போதும் நீரே என்னை தூக்கிவிட்டீரே நீரே என்னை கைவிடவே இல்லை என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை
2.என் நினைவுகளை அறிந்தவர் நீரே என் இதயத்தின் ஏக்கமும் நீரே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே நான் உமக்காய் வாழ்ந்திடுவேன் உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே