தூதர்கள் பாடுவதேனோ
thoodhargal paaduvadheno
தூதர்கள் பாடுவதேனோ! - இந்த வேளையில் நாதங்கள் ஏனோ! தேவ
புவியெங்கும் மகிமை காட்சிதரும் மாட்சிமை யாமிது வானோர்க்கும் இனிமை - துதி
1. பூமியிலே சமாதானம் - இந்த புல்லரின் மீதினில் பிரியம் - என்றும் உதித்தனன் இன்றும் புதியதோர் பாலன் ஜெனித்தார் தீர்த்திட தேசத்தின் சாபம் - தூத
2. கந்தை துணியில் தூங்கும் - மாட்டு மந்தையின் மத்தியில் தங்கும் - சுதன் சுந்தரப் பாலன் ஏங்குவதேனோ! விந்தையாம் இவர்க்கிந்தப் பாடுகள் ஏனோ! - தூத
3. உலகத்தின் மீட்பருக்கிடமோ - குடில் வல்ல தேவனுக்கிது தகுமோ - இந்த சொல்லுதற்கரிய அன்பிது வலித்தே பொல்லாங்கராம் நம்மில் அன்பு தான் பெரிதே - தூத
4. அடிமையின் ரூபமிதேனோ! - எமை ஆட்கொள்ள வந்த தாலோ - இந்த படிமிசை எவரும் பகர்தற்கரிதான பாதக ரா மெமக் காயிந்தப்பாடோ - தூத
5. அதிசயமானவர் தானே - எமக்கு காலோசனைக் கர்த்தரே - இவர் வல்லமை தேவனே புல்லணை மீதிலே சொல்லரும் சமாதானம் வந்தாரோ - தூத