தோலினால் மூடணுமே
tholinaal moodanumae
தோலினால் மூடணுமே ஆவியை அனுப்பணுமே ஒரு சேனையாய் பலத்த சேனையாய் நான் காலூன்றி நிற்கணுமே - வாரும்
பாவங்கள் மறைந்திடணும் சாபங்கள் நீங்கிடணும் சகல கட்டுகளும் இப்போதே உடைத்திடணும் நீர் வீட்டுக்கு வர வேணுமே மாற்றம் தர வேணுமே - என் இழந்ததை தேடி மீட்கவே நீர் வந்தீரே ஏசையா
வியாதிகள் மறைந்திடணும் வேதனைகள் நீங்கிடணும் கவலை கண்ணீரெல்லாம் இன்றே முடிந்திடணும் இயேசுவே வந்திடுமே தாமதம் வேண்டாமே இயேசுவே என் வாழ்விலே நீர் வந்தாலே அற்புதமே