தொலைந்து போன ஆடு
tholaindhu pona aadu
தொலைந்து போன ஆடு நான் என்னை தேடி வரனுமா? – 2 ஆடுகளெல்லாம் அங்கிருக்க என்னை மட்டும் தேடனுமா? – 2
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம் வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம் தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம் வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் – 2 – தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல் நோக்கமாய் இருக்கும் ஆ….அ… தேவனின் கண்கள் என் மேலே நோக்கமாய் இருக்கும் ஆ…அ…. தீயவர் என்னை தீண்டிட நினைத்தால் தூயவர் கைகள் காத்திட ஓங்கும் – 2 – தகுதியற்ற