தோள் மேல் தூக்கி வந்த
thol mel thookki vandha
தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள்மேல் சுகம்தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே
விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டுப் போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பிரே-2
1. நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்கப்பட்டு விலகிப் போனேன் புழுங்கிய மனசால பாசம் தந்தீர் வாழ்வேனே வசதியாய் உன் தோளிலே சாய்வேனே எந்நாளுமே
2. கசங்கிய நான் கலங்கி நின்றேன் ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர் கரையுடனே ஒதுங்கி நின்னேன் ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க தொல்லையாய் என்னதான் பார்க்காமலே பிள்ளையாய் பார்த்தீரய்யா