தியாக மெனக்கோ
thiyaaga menakko
தியாக மெனக்கோ நாதா - என் ஜீவனில் நாயகா ஏழையென் தாரகா
1. அன்பினா லெமை மீட்பதற்காக அன்னை உமை வெறுத்தார் - என்னையும் விண்ணில் சேர்க்க எண்ணிக் கொண்டே மன்னா என்னை கண்டீர் - தியா
2. பாதகர் பலர் பரிகசிக்க மெளனமானீரோ - வீணராய் வாதினாலே மாளுவோரை வெல்லும் தயையீதோ - தியா
3. சோதனை உமை சூழும் வேளை வெறுத்தாரா சீஷர் - பாவிக்காய் கொல்கொத்தாவில் சொல்லும் வேளை தனிமையானீரோ - தியா
4. சாய்க்கவும் தலை வைக்கும் இடம் வாய்க்கால் தலைவானேன்-தயங்கி மாயையில் தமிழ் வோரையும் மார்பில் அனணக்கவோ - தியா
5. என்றும் நீர் எமைச் சேர்ப்பதற்கோ ஏதுமற்றீரோ - எந்தையே இப்பேரன்பிற் கென்ன செய்வேன் பேசும் ஏதும் செய்வேன் - தியா