திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில்
thivya aikkiyathil nilaippomeyaagil
1. திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில் அருள் ஜோதியிலே நடப்போம் வல்ல ஆவியினால் தேவ சித்தம் செய்தால் பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்.
கீழ்ப்படிவோம் தேவ சித்தம் செய்வோம் திரு வாக்கை எப்போதும் நம்பிக் கீழ்ப்படிவோம்.
2. மேகம் தோன்றுமானால் அன்பின் சூரியனால் அது நில்லாமல் மறைந்தே போம் சோர்பு சந்தேகமும்! அவ நம்பிக்கையும் அணுகாமலே முன் செல்லுவொம்.
3. எந்த வேலையிலும் இன்ப துன்பத்திலும் அருள் நாதர் சகாயம் செய்வார் வரும் சோதனையோ மனோ சஞ்சலமோ இவை நீக்கியே பாதுகாப்பார்.
4. நம்பிக் கீழ்ப்படிந்தே திருப்பாதத்திலே நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம் பெரும் நன்மை ரூடவ்வார் அபிஷேகம் செய்வார் தேவ ஆவியைப் பெற்றுக் கொள்வோம்.
5. கர்த்தரோ டின்பமாய் அந்நியோந்நியமாய் நீங்காமலே வாசம் செய்குவோம் அவர் சொற்படியே உண்மையோடுடனே மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்.