திருநாம கீர்த்தனம்
thirunaama keerthanam
திருநாம கீர்த்தனம் பாடாத நாவும் இருந்தென்ன பயனோ நாதா இறைவா உம் அன்பிற்கு சாட்சி சொல்லாத உதடுகள் எனக்கேன் நாதா நான் வாழ்வதும் எதற்கோ தேவா
1. புலர்ந்திடும் நன்நாளில் பாடியறிவிக்கும் குயிலுடன் சேர்ந்து நான் உமை பாடுவேன் நதியதன் அலை பாயும் சங்கீதமேற்கொண்டு குளிர்காற்றில் நினைத்துமை துதிப்பேன்
2.அந்திமத்தீர்ப்புநாள் விரைவில் வருமென்று ஆவலாய் யாவரும் நோக்குகின்றோம் வான மேகங்களில் நீர் வரும் அந்நாளில் வானோர்களோடும்மைத் துதிப்பேன்