திரும்பு திரும்பு ஏன் சாகவேண்டும்
thirumbu thirumbu en saagavendum
1. திரும்பு திரும்பு ஏன் சாகவேண்டும்? கர்த்தர் இரக்கத்தால் சமீபிக்கிறார் "வா" என்கிறார் யேசுவும் சுத்தாவியும் ரட்சிப்பைக் கொடுக்கக் காத்து நிற்கிறார்.
2. உனது இதயம் சீர் அடையுமா நீ கால தாமதம் செய்து நிற்பதால்? நிர்பந்தமான பாவியாயினும் வா ரட்சண்ய ஊற்று இங்கே ஓடுவதால்.
3. பசியால் வருந்தி நிற்பதெதற்கு? யேசுவின் அன்புதான் உனக்குத் தேவை நீ இன்னம் சந்தேகிப்பது எதற்கு? ஆராய்ந்து பார் மட்டற்ற கிருபையை.