திருக்குமரா நின் திருவாய்
thirukkumaraa nin thiruvaay
திருக்குமரா நின் திருவாய் மலர்ந்தொரு இரகசியம் சொல்லடா-2 தூதர்கள் வாழ்த்திட மேய்ப்பர்கள் பணிந்திட-2 அன்னையின் மடியினில் அன்புருவாய் பிறந்த-திருக்குமரா
1.மேசியா வருவார் மீட்பினை தருவார் வாளோடு வருவார் வதம் செய்து காப்பார் என்று தான் யூதரும் எதிர்பார்க்கையிலே-2 மாட்டுக்கொட்டிலில் ஏன் பிறந்தாய்-என திருக்குமரா
ஆ..அ..அ..அ..ஆ...அ..அ..அ..ஆ..அ..
2.அரசராய் வருவார் அரண்மனை பிறப்பாய் தாவீதின் வாரிசாய் தரணியை ஆள்வார் என்று தான் மாந்தரும் எதிர்ப்பார்க்கையிலே-2 ஏழையின் கோலமாய் ஏன் பிறந்தாய்-என திருக்குமரா