திருச்சபை எழும்பும் காலம் இதுவே
thirucchabai ezhumbum kaalam idhuvae
திருச்சபை எழும்பும் காலம் இதுவே இதுவேதான் திருச்சபை செயல்படும் நேரம் கண்டது இதுவேதான் -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா -(4)
1. தேசத்தின் அழிவை தடுக்க தேடுகிறார் தேவன் உன்னை -(2) திறப்பில் நின்று ஜெபிக்க தூசியை உதறி எழும்பிடு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா (4)
2. இயேசுவை அறியா ஜனங்கள் இந்தியாவில் கோடி உண்டு -(2) இயேசுவை பகிர்ந்து கொடுக்க கடமை செய்ய விரைந்திடு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா(4)
3. அதிகாரம் இயேசு தந்திட்டார் கலங்காமல் தேசத்தை கலக்கிடு -(2) அற்புதம் அடையாளம் நடக்க வல்லமை தருவார் புறப்படு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா(4)